தமிழகத்திற்கு நீதி வழங்குங்கள் - லாலுவுக்கு வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil


சென்னை:

மதுரை கோட்டத்தில் இணைந்துள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கும் முடிவைத் திரும்பப் பெற்று தமிழகத்திற்கு நீதி வழVaikoங்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் கோட்டத்துடன் கோவை, திருப்பூரை சேர்ப்பதற்காக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய தமிழகப் பகுதிகள், பாலக்காட்டுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழக கட்சிகள் பெரிய அளவில் எதிர்க்காமல் அமுக்கமாக இருக்கின்றன. ஆனால் மதிமுக மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் பிரசார இயக்கம் மேற்கொண்டார். உச்சகட்டமாக பொள்ளாச்சியில் மதிமுக சார்பில் பிரமாண்ட கண்டனப் பேரணியும் நடந்தது.

இதையடுத்து டெல்லிக்குச் சென்ற வைகோ அங்கு லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தார். அதில், கோவை மாவட்டத்தின் முக்கிய விவசாய, வர்த்தக மையமாக திகழ்வது பொள்ளாச்சி. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு பயிர் செய்கின்றனர்.

1980ம் ஆண்டு நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் பாதைகள் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதை எதிர்த்து நெல்லை, குமரி மக்கள் போராட்டத்தில் குதித்னர். மதுரை கோட்டத்துடனேயே தங்களது பகுதிகள் நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ரயில்வே புறக்கணித்து விட்டது.

பொள்ளாச்சியில் மதிமுக எம்.பி. கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் அங்கு அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளுக்காக ரயில்வே அமைச்சகம் இந்த ஆண்டு ரூ. 30 கோடியை ஒதுக்கியுள்ளது. இப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சியை பாலக்காடு கோட்டத்தில் இணைந்தால் அந்தப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை பாலக்காட்டுடன் இணைக்கும் முடிவைத்த திரும்பப் பெற்று தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைக்க ரயில்வே துறை முன்வர வேண்டும் என்று அதில் வைகோ கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+