பொது மக்களுடன் சாலை மறியல்: அதிமுக எம்எல்ஏ கைது
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி பொது மக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 12 கிராம சாலைகள் புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன. இது பற்றி தொகுதி எம்.எல்.ஏ சட்டசபையில் பேசியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநில உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சி இயக்குனரிடம் பலமுறை பொது மக்கள் மனு கொடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்தும் சாலைகளை உடனடியாக புதுப்பிக்க கோரியும் இன்று காலை விளாத்திகுளத்தில் அதிமுக எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் தாசில்தார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். 12 கிராம சாலைகளில் 3 சாலைகள் உடனடியாக புதுப்பித்து தரப்படும் என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மறியல் போராட்டத்தால் அந்த வழியாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் பங்கேற்பதற்காக விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கண்டித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் அதையும் மீறி 25 மாணவர்கள் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ சின்னப்பன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications