டியூப்லைட் கடத்திய பஞ்சாயத்து தலைவி!
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் டியூப் லைட்கள் கடத்த முயற்சித்த தலைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துத் தலைவியாக இருப்பவர் முத்துலட்சுமி. பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து 8 அட்டை பெட்டிகளில் டியூப் லைட் மற்றும் சேக்குகளை ஒரு டிரைசைக்கிளில் பஞ்சாயத்துத் தலைவியின் கணவர் வின்சென்ட், அவரது உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பஞ்சாயத்து துணை தலைவர் அம்பாசங்கர் 2வது வார்டு உறுப்பினர் கருப்பசாமி, ஆகியோர் இது குறித்து கேட்டனர். இதற்கு வின்சென்ட், செல்வகுமார் ஆகியோர் சரியாக பதிலாளிக்காமல் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளனர்.
இதையடுத்து அம்பாசங்கர், கருப்பசாமி ஆகியோர் தலாமுத்துநகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சின்னக்கண்ணு, எஸ்.ஐ சீனிவாசன் ஆகியோர் அங்கு சென்றபோது செல்வகுமார் தப்பி ஓடிவிட்டார்.
அதன்பிறகு வின்சென்ட்டிடம் போலீசார் விசாரித்தபோது நாளை பஞ்சாயத்து கூட்டம் நடைபெற இருப்பதால் அறையை சுத்தப்படுத்தினோம். ஆனால் செல்வகுமார் டியூட் லைட்டுகளை வெளியே எடுத்து போனது எனக்கு தெரியாது என்று கூறினார்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் பஞ்சாயத்து டியூப் லைட்டுகளை வெளிநபர் ஒருவருக்கு விற்பதற்காக கொண்டு செல்ல முயற்சித்தது தெரிய வந்தது.
இதையடுத்து செல்வகுமார், வின்சென்ட், பஞ்சாயத்துத் தலைவி முத்துலெட்சுமி, உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications