மருத்துவமனையில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சிவமுருகன். இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மகள் லதா அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையின் 4வது மாடிக்கு சென்றார். அங்குள்ள சிறுநீரகவியல் சிறப்பு வார்டு பிரிவுக்கு சென்ற லதா, அங்கிருந்து திடீரென்று கீழே குதித்துவிட்டார்.
கீழே விழுந்த லதாவின் கை, கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே லதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், லதா விழுந்த இடத்தில் கிடந்த பையில் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் நன்றாக படிக்க மாட்டேன். எந்த வேலையையும் உருப்படியாக செய்ய மாட்டேன். நான் இறந்தவுடன் எனது உடலை என்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும் போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று விசாரணை செய்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications