கி.வீரமணி மீது சு.சுவாமி அவமதிப்பு வழக்கு
சென்னை:
தமிழக பந்த் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வால் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதன் மூலம் நீதிமன்றத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவமதித்து விட்டார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலை தெரிவித்தார் சுவாமி. அவர் கூறுகையில்,
தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பந்த் நடத்தத் தடை விதித்தது. இந்த நிலையில் முழு அடைப்புக்கு தடை விதித்து தீர்ப்பளித்த பெஞ்சில் இடம் பெற்றிருந்த மூத்த நீதிபதி பி.என்.அகர்வால் குறித்து விமர்சித்தும், நீதிபதியின் மதிப்பைக் குறைக்கும் வகையிலும் கி.வீரமணி பேசியுள்ளார்.
மேலும், ராமர் பாலம் தொடர்பான வழக்கை பி.என்.அகர்வால் விசாரிக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே கி.வீரமணி மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
சேது சமுத்திரத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டத்தால் நமது நாட்டுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி பணம் தேவையில்லாமல் செலவாகும் என்று கூறினார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications