22 ஆண்டுகளுக்கு பின் யுனெஸ்கோவில் சிங்கப்பூர்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரக் கழகத்தில் (யுனெஸ்கோ) 22 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் இணைந்துள்ளது.
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் விலகியது. இந்த நிலையில் இத்தனை கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் யுனெஸ்கோ அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
மீண்டும் இணைந்த சிங்கப்பூரை வரவேற்ற யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் கோசிரோ மட்சுரா கூறுகையில், யுனெஸ்கோவில் இணைந்துள்ள 193வது நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
பல்வேறு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் முக்கிய அமைப்பாக யுனெஸ்கோ திகழ்கிறது. இப்படிப்பட்ட அமைப்பில் சிங்கப்பூர் மீண்டும் இணைந்துள்ளது வரவேற்புக்குரியது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications