மதுரையில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை மீனவர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி
சென்னை:
மதுரை சிறை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை மீனவர் சங்கத் தலைவர் வர்ணகுல சூர்ய கனிசியஸ் பெர்னாண்டோவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நான்கு மீனவர்களைப் பார்ப்பதற்காக பெர்னாண்டோ மதுரைக்கு வந்திருந்தார்.
சிறைக்குள் அவர் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக நுழைய முயன்றபோது அவருக்கும், சிறைக் காவலர் தேவராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பெர்னாண்டோவை, தேவராஜன் தனது துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பெர்னாண்டோவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications