தமிழக மீனவர் இறந்த வழக்கு: மங்களூர் போலீசிடம் ஒப்படைக்க முடிவு
குளச்சல்:
குளச்சலை சேர்ந்த மீனவர் ஜார்ஜ் பிச்சை மங்களூரில் மர்மமான முறையில் இறந்த வழக்கை மங்களூர் போலீசாரிடம் ஒப்படைக்க கன்னியாகுமரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் பிச்சை கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதைத் தொடர்ந்து தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது மனைவி அருள்மேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி உத்தரவி்ன் பேரில் ஆகஸ்ட் 8ம் தேதி ஜார்ஜ் பிச்சையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் ஜார்ஜ் பிச்சை உடலில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் விஷம் குடித்ததால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அருள்மேரி நாகர்கோவிலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை தொடங்க தக்கலை ஏ.எஸ்.பி உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 3ம் தேதி மங்களூர் சென்றனர். அங்கு விசாரணையை முடித்த கொண்டு போலீசார் குளச்சல் திரும்பினார்கள்.
அங்கு ஜார்ஜ் பிச்சையின் மரணம் குறித்து துப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மங்களூர் போலீசில் ஒப்படைக்க குமரி மாவட்ட போலீஸ் முடிவு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications