ஹோமோ செக்ஸ் விவகாரம்-விசாரணையை விரைவாக்க கைதான ஆசிரியர் கோரிக்கை
புளியங்குடி:
டியூசன் படிக்க வந்த மாணவரை தகாத உறவுக்கு அழைத்து அவர் மறுத்ததால் கொலை செய்ததாக ஆசிரியர் மீது தொடரப்பட்ட வழக்கை டி.எஸ்.பி விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புளியங்குடியை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்த திருமலைசாமியின் மகன் விக்னேஷ்வரன். பிளஸ் டூ படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்ற பூபதி. ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ளார். இவரிடம் விக்னேஷ்வரன் டியூசன் படித்து வந்தார்.
கடந்த ஜீன் மாதம் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ்வரன் இரவில் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் அங்குள்ள குளம் அருகே விக்னேஷ்வரன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்த விசாரணை நடத்திய போலீசார் சத்தியராஜை தேடி வந்தனர். ஆனால், தலைமறைவான சத்தியராஜ் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில், நானும் விக்னேஸ்வரனும் செக்ஸ் கதைகள் பேசி கொள்வோம். இதை தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒரினச் சேர்க்கையில் ஈடுபடுவோம். சம்பவதன்று ஒரினச் சேர்க்கைக்கு ஈடுபட முயன்றபோது அவன் மறுத்ததால் அவனை கொன்றேன் என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
இந் நிலையில் இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சத்தியராஜ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
நான் விக்னேஷ்வரனுடன் ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், சம்பவதன்று மறுத்ததால் அவரை கொலை செய்ததாகவும் போலீசார் என்னை துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த வழக்கை வேறு காவல் நிலைய போலீஸார் விசாரிக்க உத்தவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வழக்குப் பதிவு செய்து நீண்ட காலமாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். சத்தியராஜ் அப்பகுதி டி.எஸ்.பியிடம் மனு அளிக்க வேண்டும். அவர் அதை பரீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications