தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குநர் வாட்மோர்
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பணியாற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வாட்மோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக, அகாடமியின் தலைவர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அகாடமியின் தலைவராக கபில்தேவ் இருந்து வந்தார். இந்த நிலையில் ஜீ டிவி ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் லீக்குக்கு அவர் போய் விட்டதால் அகாடமி தலைவர் பதவியிலிருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியது.
சமீபத்தில்தான் தலைவர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அகாடமியின் இயக்குநர் பொறுப்புக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாட்மோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து வாட்மோரிடம் பேசி அவரது ஒப்புதலை வாங்கும் பொறுப்பு ரவி சாஸ்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் வாட்மோரிடம் பேசி தற்போது அவரது ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
வாட்மோர் ஆஸ்திரேலியர் ஆனாலும் கூட அவர் பிறந்தது இலங்கையில். இலங்கை அணி 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது வாட்மோர்தான் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். இலங்கை அணியை தூக்கி நிறுத்தியவர் வாட்மோர். அவரது பயிற்சி முறை வெகு பிரசித்தி பெற்றது.
இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியை முடித்துக் கொண்டு வங்கதேச பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் வாட்மோர். அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. ஆனால் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் சிலர் யார் பேச்சையும் கேட்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ளதால், பயிற்சியாளராக அதிக ஆர்வம் காட்டவில்லை வாட்மோர்.
இந்த நிலையில்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்கவுள்ளார் வாட்மோர். அவரை படிப்படியாக இந்திய அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்மோர், இங்கிலாந்தின் லாங்ஷயர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது அந்த அணி 1998 மற்றும் 1999ல் தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications