ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் !
புதுக்கோட்டை:
விராலிமலையில் ஆசிரியையிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் பள்ளிக்கு பொது மக்கள் பூட்டு போட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சரளப்பட்டியில் உள்ளது ஊராட்சி துவக்கப் பள்ளி. இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன்.
இவர் பள்ளிக்கு தினமும் விராலிமலையிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்து செல்கிறார். இதே பள்ளியில் ஆசிரியையாக புதிதாக வந்து சேர்ந்தார் மல்லிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
இவர் தனது ஊரிலிருந்து பள்ளிக்கு பஸ்ஸில் வந்து செல்கிறார். விராலிமலையிருந்து தான் வரும் போது உங்களையும் அழைத்து வந்து விடுகிறேன் என புதிய ஆசிரியையிடம் கூறியுள்ளார் தலைமை ஆசிரியர் முருகன்.
இதை நம்பிய மல்லிகா டீச்சரும் அவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். வழியில் தனது சில்மிஷ விளையாட்டை ஆசிரியை மல்லிகாவிடம் காட்டியுள்ளார் முருகன். இதையடுத்து அவருடன் பைக்கில் செல்வதை தவிர்த்துவிட்டார்.
இதையடுத்து பள்ளியிலேயே ஆசிரியையிடம் தவறாக நடக்க முயற்சி மேற்கொண்டாராம்ல முருகன். இதைத் தொடர்ந்து இவ் விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்லிய ஆசிரியை தனக்கு நியாயம் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டதோடு தலைமை ஆசிரியர் முருகனை வேறு ஊருக்கு மாற்ற வேண்டி போராட்டத்தில் குதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர். பள்ளிக்கு மக்கள் போட்ட பூட்டை அகற்றினர். சில்மிஷ ஆசிரியர் முருகனை வேறு ஊருக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications