தா.கி. கொலை வழக்கு-சித்தூர் நீதிமன்றத்தில் நவ.10ம் தேதி விசாரணை!
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு நவம்பர் 10ம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் அமைச்சர் தா.கி மதுரையில் கொைல செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உட்பட சுமார் 13 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 114 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை மதுரையில் விசாரித்தால், சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி முத்துராமலிங்கம் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில் சித்தூர் நீதிமன்றத்தில் நவம்பர் 10ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications