சேது கால்வாயில் அத்துமீறி நுழைந்த கப்பல்
ராமேஸ்வரம்:
சேதுக் கால்வாய் பணிகள் நடக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கப்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவாவில் இருந்து பாம்பன் பாலம் வழியாக ஆந்திராவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திற்கு எம்.பி.கரன் அர்ஜூன் என்ற கப்பல் சென்றது.
இந்தக் கப்பல் பாம்பன் பாலம் வழியாக செல்வதற்கு முன் அனுமதி பெற்றிருந்ததால், துறைமுக அதிகாரிகள் கப்பல் செல்வதற்கு பாம்பன் பாலத்தை திறந்து விட்டனர்.
ஆனால் இந்தக் கப்பல் பாம்பன் வழியாக செல்லாமல் வேறு வழியாக சென்றுவிட்டது. பாம்பன் பாலத்தை திறந்து வைத்து காத்திருந்த துறைமுக அதிகாரிகள் மிதவைக் கப்பல் வராதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே துறைமுக அதிகாரிகள் கப்பலை கண்டுபிடிக்க கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தேடுதல் பணியில் இறங்கியபோது, தடை செய்யப்பட்ட சேதுக் கால்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்த அந்த கப்பலை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த கப்பல் துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் அனைத்துக் கப்பல்களும் துறைமுகத்திற்கு சுங்கவரி செலுத்த வேண்டும். அதனால் இந்த கப்பலை சேதுக் கால்வாய் வழியாக செலுத்தியதாக மாலுமி கூறியுள்ளார்.
சேது கால்வாய் பணிகள் நடந்து வருவதால் அதன் வழியே கப்பல்கள் செல்ல தடை உள்ள நிலையில் அதை மீறி இந்தக் கப்பல் நுழைந்துள்ளது.
இதையடுத்து கப்பல்கள் மற்றும் படகுகள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடலோர கண்காணிப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications