செக் மோசடி-தூத்துக்குடி நர்சுக்கு ஓராண்டு ஜெயில்
தூத்துக்குடி:
செக் மோசடி வழக்கில் அரசு மருத்துவமனை நர்சுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி ஜோதி. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு ஆல்பர்ட் வீடு கட்டுவதற்காக தூத்துக்குடியை சேர்ந்த ஜோதிநாதன் என்பவரிடம் ரூ. 2.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
மேலும் அதனை ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக கூறி கடன் தொக்கைக்காக தனது மனைவி ஜோதி பெயரிலான வங்கி கணக்கு காசோலையை ஜோதிநாதனிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 24-09-2002 அன்று காசோலையை வங்கியில் போட்டார். ஆனால் அது பணமில்லாமல் திரும்பி வந்து விட்டது.
அதன்பிறகு ஜோதிநாதன் அதே காசோலையை மீண்டும் 8-11-2002ல் வசூலுக்காக போட்ட போதும் கணக்கில் பணம் இல்லையென்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜோதிநாதன் தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வீ.தனியரசு விசாரித்து ஜோதிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ஓன்றரை லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications