'கிட்னி': 3 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
சென்னை:
சிறுநீரகத் திருட்டு தொடர்பாக சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளின் உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பழனி ரவிச்சந்திரன் என்பவர் சமீபத்தில் மும்பையில் கைது செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கானோரிடம் சிறுநீரகங்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டாக்டர் பழனி ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை, நியூ பாரதிராஜா மருத்துவமனை மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனை ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது சிறுநீரக திருட்டு மோசடியை செய்ததாக மும்பை போலீஸார் கூறியுள்ளனர்.
ஆனால் இதை சம்பந்தப்பட்ட 3 மருத்துவமனைகளும் மறுத்துள்ளன. இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த மூன்று மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்ட உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
பாரதிராஜா மருத்துவமனை தி.நகர் மேட்லி சாலையில் உள்ளது. அதே மருத்துவமனையின் அதி நவீன பிரிவான நியூ பாரதிராஜா மருத்துவமனை ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இந்த இரு மருத்துவமனைகளிலும் தமிழக அரசின் மருத்துவப் பணிகளுக்கான இயக்குநர் டாக்டர் பாபா பக்ருதீன், உதவி இயக்குநர் சரோஜினி, கண்காணிப்பாளர் காமேஸ்வரன் ஆகியோர் விஜயம் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல செயின்ட் தாமஸ் மருத்துவமனையிலும் இந்த அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications