பெனாசிர் வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கம்
இஸ்லாமாபாத்:
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க முஷாரப் உத்தரவிட்டுள்ளார்.
முஷாரப் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து அதிபரானதும், பெனாசிர் பூட்டோ நாட்டை விட்டு வெளியேறினார். அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டன. ஏற்கனவே நவாஸ் ஷெரீப் காலத்திலும் அவர் மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டிருந்தன.
சமீபத்தில் முஷாரப்புக்கும், பெனாசிருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து பெனாசிர் மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய முஷாரப் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது பெனாசிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருக்கும் உத்தரவையும் நீக்க முஷாரப் உத்தரவிட்டுள்ளாராம். விரைவில் அந்நாட்டு தலைமை வங்கியின் தலைவருக்கு இதுதொடர்பாக உத்தரவு அனுப்பப்படவுள்ளது.
'லேட்'டாக வர மீண்டும் முஷாரப் கோரிக்கை:
இதற்கிடையே, பாகிஸ்தான் திரும்பும் திட்டத்தை பெனாசிர் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிபர் முஷாரப் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெனாசிர் பூட்டோ தனது வருகையை சற்று தாமதமாக்க வேண்டும் என்று மீண்டும் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளேன்.
அவர் தனது வருகையை தாமதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். அவர் அதை ஏற்காவிட்டால் தடுக்க முயற்சிப்பேனா என்று கேட்கக் கூடாது. இதுவரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றார் முஷாரப்.
சில நாட்களுக்கு முன்புதான் பெனாசிர் தாமதமாக வர வேண்டும் என்று முஷாரப் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை பெனாசிர் தரப்பு நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 18ம் தேதி பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குகளை வாபஸ் பெற தடை:
இதற்கிடையே, பெனாசிர் பூட்டோ மீதான வழக்குகளை திரும்பப் பெற முஷாரப் அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளதற்கு, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அவசர சட்டம் மூலம் பெனாசிர் மற்றும் இதர தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் சில கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை பெனாசிர் மற்றும் இதர தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளை திரும்ப பெறக் கூடாது என்று கூறியதுடன், அந்த அவசர சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications