நீதிபதி சர்க்காரியா மரணம்
டெல்லி:
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா சண்டிகரில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.
இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட கமிஷன்களிலேயே பெரும் பரபரப்பையும், இன்று வரை முக்கியத்துவம் பெற்றதுமான கமிஷன் சர்க்காரியா கமிஷன்.
கடந்த 1983ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்டது இந்த கமிஷன். நீதிபதி சர்க்காரியா தனது பரிந்துரைகளை 1988ம் ஆண்டு சமர்ப்பித்தார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், அதை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அந்த அறிக்கை இந்திரா காந்தியிடம் வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலங்களில் அமல்படுத்துவது குறித்தும், அதிகாரப் பகிர்வு குறித்தும் பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியிருந்தார் நீதிபதி சர்க்காரியா.
நீதிபதி சர்க்காரியா நீண்ட காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சண்டிகரில் உள்ள தனது வீட்டில் சர்க்காரியா மரணமடைந்தார்.
சர்க்காரியாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications