சர்க்கரை ஆலையில் தீ-ரூ.50 லட்சம் சேதம்
கடலூர்:
பெண்ணாடம் அருகேயுள்ள சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ளது இறையூர். இங்கு அம்பிகா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை பேக்கிங் செய்வதற்காக 45,000 மேற்பட்ட காலி சாக்குகள் ஒரு கிடங்கிலும், சர்க்கரை நிரப்பப்பட்ட மூட்டைகள் மற்றொரு கிடங்கிலும் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் சர்க்கரை ஆலையின் காலிச் சாக்குகள் இருந்த கிடங்கில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்திலேயே அருகிலிருந்த சர்க்கரை மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கும் பரவியது.
இந்த தீ விபத்து குறித்து கடலூர் மற்றும் பெண்ணாடத்திலிருந்து 4 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புப் படை வீரர்கள் விடிய விடிய தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 45,000 காலி சாக்குப் பைகள், சர்க்கரை மூட்டைகள் மற்றும் சாக்கு தைக்கும் இயந்திரங்கள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டன. இந்த தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications