கட்டப் பஞ்சாயத்து போலீசார்: கமிஷனர் 'வார்னிங்'
சென்னை:
புகார் கொடுக்க வருகிறவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள மதுராவயலில், லாரியை நிறுத்தி முறையான ஆவணங்கள் இருந்தும் கூட லாரி டிரைவரிடம் ரூ. 50,000 லஞ்சம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டர் சீதாராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
சீதாராமன் கட்டப் பஞ்சாயத்து நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. புகார் கொடுக்க வருகிறவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பணம் பறிப்பது சீதாராமனின் முக்கிய வேலையாம். இந்த நிலையில்தான் லஞ்ச வழக்கில் அவர் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் இன்ஸ்பெக்டர்களை கண்காணிக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களிடத்தில் கட்டப் பஞ்சாயத்தில் ஆய்வாளர்கள் ஈடுபடக்கூடாது. புகார்களை முறைப்படி பதிவு செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிவில் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது பெண் போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்களையும் கண்காணிக்க உளவுப்பிரிவு போலீசாருக்கு நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தற்போது சென்னையில் உள்ள 40 இன்ஸ்பெக்டர்கள் உளவுப்பிரிவு போலீசாரின் தீவிர கண்காணிப்பு பிடியில் இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications