கடித்துக் குதறிய நாய்கள் - சிறுமி படுகாயம்
கோயம்புத்தூர்:
கோவை அருகே 5 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறின. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
சூலூர் அருகேயுள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு நீலவேணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவருடைய கடைசி மகளான தனலட்சுமி 1ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் தனலட்சுமி. அவருடைய வீட்டிற்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தது. இதில் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்திருப்பவர்கள், கோழி கழிவுகளை அந்த குப்பையில் கொட்டியுள்ளனர்.
இந்தக் கழிவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக குவிந்தன. அப்போது நாய்கள் ஒன்றோடு ஒன்று கடுமையாக மோதிக் கொண்டன.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் அருகே நாய்கள் பயங்கர சப்தத்துடன் சண்டை போட்டன. இதைப் பார்த்து பயந்து போன தனலட்சுமி அழுதுள்ளார். பின்னர் நாய்கள் அனைத்தும் தனலட்சுமி மீது பாய்ந்து கடித்துக் குதறின.
சிறுமியை நாய்கள் கடிப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கம்பு, கட்டைகளை எடுத்து நாய்களை விரட்டியடித்தனர். ஆனால் அதற்குள்
படுகாயமடைந்திருந்தார் தனலட்சுமி.
அவரை அக்கம் பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனலட்சுமி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications