நாடு முழுவதும் தியேட்டர்கள்-வர்த்தக வளாகங்களில் தீவிர பாதுகாப்பு
டெல்லி:
நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்கள், வர்த்தக வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் தியேட்டரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த நடவடிக்கையை மத்திய உள்துறை முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா கூறுகையில், திரையரங்க உரிமையாளர்கள், வணிக வளாக உரிமையாளர்கள் தங்களது வளாகங்களில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.
தீவிரவாதிகளின் மிரட்டல் இன்னும் நீடிப்பதால் கூடுதல் கண்காணிப்புடன் அவர்கள் செயல்பட வேண்டும்.
காவல்துறை புற பாதுகாப்பைக் கொடுத்தாலும் கூட தியேட்டர் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவற்றின் உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, பஞ்சாப், டெல்லி மற்றும் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சம் நிலவுவதால், அங்கு உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications