காங்-கம்யூ மோதலை தீர்த்து வைத்த கருணாநிதி
டெல்லி:
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட மோதலைத் தீர்த்து வைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
என்டிடிவி தொலைக்காட்சியின் வாக் த டாக் நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு சிறப்புப் பேட்டியளித்தார் கருணாநிதி. அப்போது மகளும் எம்பியுமான கனிமொழியும் உடனிருந்தார்.
அப்போது கருணாநிதி கூறியதாவது
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் நான் பேசினேன்.
அவர்கள் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி சுமூக தீர்வு காண உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தங்கள் கருத்தைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் ஒரு போதும் வற்புறுத்தவில்லை.
நாட்டின் நலனுக்கு எது நல்லதோ அதையே செய்ய நானும் விரும்பினேன். இந்த பிரச்சனையை முன் வைத்து மத்திய ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதனால் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். பிரகாஷ் காரத், பரதன் போன்ற தலைவர்கள் என்னை சென்னையில் சந்தித்துப் பேசினார்கள்.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தொலைபேசியில் என்னுடன் விவாதித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவை. இதனால் இந்த அரசை காக்க வேண்டும் என்பதற்காக இரு தரப்பிலும் பேசி தீர்வு காணப்பட்டது.
ஆட்சி கவிழும் ஆபத்து என்ற சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும் என்பதே திமுகவின் கருத்து. இது குறித்து நான் சோனியா காந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதினேன். இடதுசாரிகளின் நிலையை விளக்கினேன்.
இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கும் முன்பே எங்களுக்கும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்தன. ஒப்பந்தம் முக்கியம் அல்ல, அரசு முக்கியம். இடது சாரிகளுக்காக நாங்களும் போராடினோம்.
இந்த அரசை உருவாக்க எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த அரசை காப்பாற்றுவது எளிமையானது தான் என்றார் கருணாநிதி.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications