திருப்பதி கோவிலுக்கு புதிய வெள்ளி ரதம்

Subscribe to Oneindia Tamil


திருப்பதி:

திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு புதிதாக வெள்ளி ரதம் தயாரிக்க திருப்பதி கோவில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் தங்கரதம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ரதங்கள் உள்ளன. ஆனால் ஏற்கனவே இருந்த வெள்ளி ரதம் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. அதன்பின்னர் புதிய வெள்ளிரதம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதிதாக வெள்ளி ரதம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை அதிகாரி கருணாகர ரெட்டி கூறுகையில், திருப்பதி கோவிலுக்கு புதிதாக ஒரு வெள்ளிரதம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ரதமாக இதுஇருக்கும். இந்த வெள்ளி ரதத்தை எவ்வளவு எடையில் தயாரிப்பது, அதில் என்னென்ன உருவங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

அடுத்த வருடத்திற்குள் இந்த வெள்ளி ரதம் தயாராகிவிடும். அதன் பின்னர் சிறப்பு வெள்ளி ரத உற்சவம் நடைபெறும் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+