தென்காசி கொலை வழக்கு-நீதிபதியிடம் வாக்குவாதம்
தென்காசி:
கொலை வழக்கில் கைதானவர்கள் நீதிபதியிடம் வாக்குவாதம் செய்யததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனீபா உள்பட 11 போலீசார் தென்காசி நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் அனீபாவின் தம்பி அலாவுதீன் வாக்குவாதம் செய்யததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் சமீபத்தில் நடந்த மோதலில் இரு மதங்களைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கைதான அனீபா உள்பட அவரது தரப்பை சேர்ந்த 11 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த வழக்கு தொடர்பாக அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பு தென்காசி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை பார்த்து நீங்கள் இன்னும் தென்காசியில் தான் இருக்கிறீர்களா, வேறு இடத்திற்கு செல்லவில்லையா, ஏன் எங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மிரட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதியிடம் எங்களை மதுரை அல்லது பாளையங்கோட்டை சிறைக்கு மாற்ற வேண்டும். எங்கள் உறவினர்களை போலீசார் மிரட்டுகின்றனர். அவர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அவர்கள் சொல்வதை நீதிபதி குருவையா பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தீடீரென அனீபாவின் சகோதரர் அலாவுதீன் நீதிபதியை பார்த்து என்ன சரி, சரி என்று கூறுகிறீர்கள், நான் சொல்வதை எழுதி நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்று ஆவேசமாக கேட்டார்.
அதற்கு நீதிபதி குருவையா உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் கவனிக்கிறேன் என்றார். பின்னர் 11 பேருக்கும் காவலை இம்மாதம் 29ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications