மாமூல் சண்டையில் ஏட்டு விரலை கடித்த ஏட்டு!
விருதுநகர்:
காவல் நிலையத்தில் இரு ஏட்டையாக்கள் கட்டுப்புரண்டு சண்டை போட்டு கடித்துக் ெகாண்டதில் ஒரு ஏட்டின் விரல் துண்டானது.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டனர்.
பல நாட்கள் ஆகியும் அவர்களுக்கு பதில் மாற்று இன்ஸ்பெக்டர், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை நியமிக்கப்படவில்லை. இதனால் காவல் நிலைய பணிகள் அனைத்தையும் ஜெயராமன், வேலுசாமி ஆகிய இரு ஏட்டையாக்களும் தான் பார்த்துக் கொண்டனர்.
காவல் நிலையத்திற்கு வரும் மாமூலை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டது.
நேற்றும் பணம் பிரிப்பதில் தகறாறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடித்துக் கொண்டனர். கடித்துக் கொண்டு கட்டி உருண்டனர். இதில் ஜெயராமனின் மோதிர விரலை ஏட்டு வேலுசாமி கடித்து துண்டாக்கிவிட்டார்.
பாதிக்கப்பட்ட ஜெயராமன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து டிஎஸ்பி குமாரவேல் விசாரனை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications
