ஜெயலலிதா வீட்டில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குள் இன்று காலை புகுந்த மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வீடு போயஸ் தோட்டத்தில் உள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒரு மர்ம நபர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நுழைந்தார்.
வீட்டின் முன் வாசல் வழியாக புகுந்த அவர் வீட்டுக்குள் உள்ள நூலகத்திற்குள் புகுந்தார். அப்போது அங்கு ஜெயலிலதாவின் தோழியான சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும் இருந்தனர்.
மர்ம நபரைப் பார்த்த இருவரும் அதிர்ந்தனர். உடனடியாக வீட்டில் இருந்த உதவியாளர் பூங்குன்றனுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து அந்த மர்ம நபரைப் பிடித்தார். வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்தினார். அதிமுக நிர்வாகிகளும் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்த ம
ர்ம நபரைப் பிடித்துச் சென்றனர்.
பிடிபட்ட அந்த நபர் டிப் டாப்பாக உடையணிந்து காணப்பட்டார். கையில் செல்போனும் வைத்திருந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை.
சமீபத்தில் கூட இதுபோல ஒரு நபர் ஜெயலலிதா வீட்டுக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயலலிதா வீட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் இதுபோன்று அடிக்கடி நடப்பதாக கூறி அதிமுக சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனை சந்தித்து இதுதொடர்பாக புகார் கொடுத்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications