காஞ்சிபுரத்தில் மர 'குண்டால்' பரபரப்பு!!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிடந்த மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நீதிமன்றம், காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், பொதுப்பணித்துறை மற்றும் இதர அரசு அலுவலகங்கள் உள்ளன.
எப்போதும் இந்த வளாகம் பரபரப்பாக காணப்படும். நேற்று காலை இந்த அலுவலக வளாகத்தில் சிவப்பு நாடா சுற்றப்பட்டு ஒரு மர்மப் பொருள் கிடந்தது. இதைப் பார்த்த சிலர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீஸார், மெட்டர் டிடெக்டர் வைத்து அதை சோதித்தனர்.
பின்னர் அந்த மர்மப் பொருளை பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு மரக் கட்டை இருந்தது தெரிய வந்தது. இதை யார் கொண்டு வந்து போட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications