பள்ளிக்கூரை இடிந்தது - மாணவர்கள் தப்பினர்
கோவை:
கோவையில் நர்சரிப் பள்ளியின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் அப்போது இல்லாததால், மாணவர்கள் தப்பினர்.
கோவையில் பிரசித்தி பெற்ற வ.உ.சி. மைதானம் அருகே நர்சரிப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் மேல் கூரை சமீப காலமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கூறி கூரையை மாற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அந்தப் பள்ளிக் கூடத்தின் மேல் கூரை சடசடவென சரிந்து விழுந்தது.
நல்ல வேளையாக அப்போது மாணவ, மாணவியர் யாரும் வகுப்புகளில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பள்ளிக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications