தேவர் குருபூஜை-ராமநாதபுரத்தில் அதிரடிப்படை குவிப்பு
ராமநாதபுரம்:
பசும்பொன்னில் நடக்கவிருக்கும் தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் பதட்டமான இடங்களில் அதிரடிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு வருடந்தோறும் தேவர் குருபூஜை நடத்தப்படும்.
இந்த வருடம் தேவரின் 100வது பிறந்த தின விழா மற்றும் 45வது குரு பூஜை விழா இரண்டும் நடக்கவுள்ளது. இதில் 30 வருடங்களுக்கு பின் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்த குருபூஜை நடக்கும். இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரும் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது.
முதல்வர் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் வரவிருப்பதால் அங்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் எஸ்பி திருஞானம் கூறுகையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்படுவார்கள். தேவர் குருபூஜைக்கு வருபவர்கள் வாகனங்களின் மேல் அமர்ந்து வர தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications