வராத கலெக்டர் - வருத்தத்தில் கிராமம்
திருநெல்வேலி:
விஷக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வராததால் அந்தக் கிராமத்தினர் வேதனை அடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் சிக்குன்-குனியாவைப் போல் புதிதாக ஒரு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆரம்பித்த இந்தக் காய்ச்சல் இப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.
இந்த மர்ம காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்திலும் இவ் விஷகாய்ச்சல் பரவியுள்ளது.
புளியங்குடி அருகேயுள்ள ஆண்டார்குளம் என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டு முதியவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆக 3 பேர் பலியாகியுள்ளனர்.
அப்பகுதியில் கடந்த 13ம் தேதி முதல் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அன்று இரவு புளியங்குடியில் ரோட்டரி கிளப் மரம் நடுவிழா உள்ளிட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் கலந்து கொண்டார்.
விழா முடிந்தவுடன் ஆண்டார்குளம் கிராமத்திற்கு அவர் வருவார். அவரிடம் குறைகளை சொல்லலாம் என்று அங்கு வசிக்கும் கிராம மக்கள் முடிவு செய்து காத்திருந்தனர். ஆனால் கலெக்டர் ஆண்டார்குளத்திற்கு வராமல் போய் விட்டார்.
கலெக்டருக்காக காத்திருந்த பொதுமக்கள் பெரும் வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர். விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது கிராமத்திற்கு ஆட்சித் தலைவர் வராதது அக்கிராமத்தினரை வருத்தமடைய வைத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications