3 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல்
ஸ்டாக்ஹோம்:
அமெரிக்காவைச் சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
நோபல் பரிசுகளை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றோர் விவரத்தை நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டு அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் லியோனாய்டு ஹர்விக்ஸ், எரிக் மாஸ்கின், ரோஜர் மயர்சன் ஆகியோர் இணைந்து நோபல் பரிசைப் பெறுகின்றனர்.
சந்ைதப் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இவர்கள் வெளியிட்ட பொருளாதாரக் கொள்கைக்காக நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ஹர்விக்ஸ் ரஷியாவில் பிறந்தவர், தற்போது அமெரிக்க பிரஜையாக உள்ளார். இவரது வயது 90. நோபல் பரிசைப் பெறும் அதிக வயதானவர் என்ற பெருமையும் ஹர்விக்ஸுக்குக் கிடைத்துள்ளது.
ரஷ்யப் புரட்சியின்போது மாஸ்கோவில் பிறந்தவர் ஹர்விக்ஸ். தற்போது மின்னசோட்டா பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவராக இருக்கிறார்.
எரிக் மாஸ்கின் நியூயார்க்கில் பிறந்தவர். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை தலைவராக இருக்கிறார்.
ரோஜர் மயர்சன் பாஸ்டனில் பிறந்தவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.
ஆல்பிரட் நோபல் உருவாக்கிய நோபல் பரிசுக்கான பிரிவில் பொருளாதாரத் துறை இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1968ம் ஆண்டுதான் இது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications