பாக் எல்லையில் ரூ.14 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
பஞ்சாப்:
பாகிஸ்தான் எல்லை அருகே ரூ.14 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்த முயன்றவரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாப் மாநிலம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளது நவ்சேரா தல்லா என்ற கிராமம்.
இந்தப் பகுதியில் நேற்றிரவு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஒரு கும்பல் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.
அந்த நபரை படையினர் சோதனையிட்டபோது 14 பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்தது.
இந்த ஹெராயின் போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.14 கோடி ஆகும்.












Click it and Unblock the Notifications