அதிமுக 36வது ஆண்டு விழா கொண்டாட்டம்
சென்னை:
அதிமுக தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் முடிந்து 36வது ஆண்டு பிறப்பதையொட்டி சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் உள்ள எம்.ஜிஆர். சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் 1971ம் ஆண்டு இதே நாளில்தான் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். இதையொட்டி இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினர், கட்சியின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னைய ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகை தந்து நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டார். (இவர் கட்சி அலுவலகத்துக்கு வருவதே ஒரு நியூஸ் தான்)
அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் விழா மலரை வெளியிட, கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.
கட்சியின் இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன் எழுதிய கனவோடு வெகு தூரம் என்ற புதினத்தின் 2ம் பாகத்தை ஜெயலலிதா வெளியிட, அதை பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் ஜெயலலிதா இனிப்புகளை வழங்கினார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அதிமுகவினர் வரவேற்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications