ராஜபாளையத்தில் கவுன்சிலர்கள் கடத்தல்!
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் துணைத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகர சபைக்கான துணைத் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மணிகண்டனும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பீமராஜாவும் போட்டியிடுகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவுக்கு 10, திமுகவுக்கு 7, காங்கிரசுக்கு 17, மதிமுகவுக்கு 2, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, தேமுதிகவுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1 கவுன்சிலர்களும் 1 சுயேச்சை கவுன்சிலரும் உள்ளனர்.
துணைத்தலைவர் பதவியை பிடிக்க 21 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. ஆனால், திமுக கவுன்சிலர்களின் ஆதரவு பீமாராஜாவுக்கு கிடைப்பது சந்தேகமே. இதனால் பதவியைப் பிடிக்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பீமராஜாவின் ஆதரவாளர் அர்ச்சுனன் அதிமுக உள்பட பிற கட்சிகளின் கவுன்சிலர்களை வளைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இதனால் எதிர்தரப்பு கடும் கோபத்தில் இருந்ததது.
பஸ் நிலையம் அருகில் பீமராஜாவும் அர்ச்சுனனும் கவுன்சிலர்கள் சிலருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டாடா சுமோ காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் அர்ச்சுனனை கத்தியால் குத்திவிட்டு அவருடன் இருந்த 4 கவுன்சிலர்களை கடத்திச் சென்றுவிட்டனர்.
கத்திகுத்து வாங்கிய அர்ச்சுனன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப் பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications