தமிழக நதிகளை இணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை
மதுரை:
தமிழகத்தில் உள்ள நான்கு முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து தமிழக திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதனை, தேசிய நீர் வழி மேம்பாட்டுக் கவுன்சிலைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
இதுகுறித்து கவுன்சிலின் தலைவர் ஏ.சி.காமராஜ் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நீர்வழி மேம்பாட்டு கவுன்சிலைச் சேர்ந்த நாங்கள் தமிழக திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதனை வரும் 18ம் தேதி சந்தித்து பேசவுள்ளோம்.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நதிகளான காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் வடக்கில் உள்ள பாலாறு ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.
நதி நீர் இணைப்பிற்கு ரூ.37,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நதிகளை இணைப்பதன் மூலம் ஒரு நதியில் வீணாகும் நீர் வறட்சியான பகுதியில் உள்ள நதிக்கு செல்லும்.
நதி நீர் இணைப்பினால் நிலத்தடி நீர் அதிகரிப்பதுடன், விவசாயிகளும் அதிக பலன் அடைவார்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு அறவே நீங்கும் என்றார் அவர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications