சிறையில் உண்ணாவிரதம்: கைதிகள் இடமாற்றம்!!
மதுரை:
மதுரை மத்திய சிறையில் இலங்கை மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த சிறைக் கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களை பார்க்க முறையாக அனுமதி பெற்று வந்த இலங்கை மீனவர் சங்கத் தலைவர் கனீசியஸ் பெர்னாண்டோவை சிறைக் காவலர் தேவராஜன் தீவிரவாதி என நினைத்து சுட்டுக் கொன்றார்.
கைதிகளை பார்க்க முறையாக அனுமதி பெற்று வந்தவரை போலீசார் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனை கண்டித்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந் நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கைதிகள் மதுரை சிறையிலிருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதில் நாகர்கோவில் ரெளடி லிங்கம் கொலை வழக்கில் கைதான விஜி கடலூர் சிறைக்கும், மற்ற கைதிகள் வேலூர், திருச்சி மற்றும் சென்னை சிறைகளுக்கும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
கைதிகளின் இந்த இடமாற்றத்தை கண்டித்து அவர்களுக்கு ஆதரவாக பிற கைதிகள் சிறையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை மத்திய சிறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications