6 ஆண்டுகளாக பெண்ணை அடைத்து வைத்து கற்பழித்த அண்ணன், தம்பிகள்
திருநெல்வேலி:
ஒரு பெண்ணை 6 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து அண்ணன், தம்பிகள் சேர்ந்து கற்பழித்து உள்ள கொடூர சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.
நெல்லையை அடுத்த தென்கலம்புதூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் வேலுத்தாய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்ற வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலுத்தாய்க்கு 17 வயது இருக்கும் போதே இவர்கள் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓடியது.
இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வேலுத்தாய்க்கு திருமண வயது எட்டவில்லை என கூறி அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவரது பெற்றோர் வேலுத்தாயை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
இதனால் வேலுத்தாய் மீண்டும் செந்தில்குமாரை நாடினார். அப்போது செந்தில் அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் முடிக்காமல் குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. இந்தநிலையில் வேலுத்தாய் கார்ப்பமானார்.
இதையறிந்த செந்தில்குமார் அவரது கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலுத்தாய் அப்பகுதி பொது மக்களுடன் சேர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரை சந்தித்து கண்ணீருடன் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், கடந்த 6 ஆண்டுகளாக செந்தில்குமார் என்னை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். செந்தில்குமாரின் அண்ணன் தம்பிகளும் என்னை கற்பழித்தனர். இதனால் கர்ப்பிணியான என்னை கர்ப்பத்தை கலைத்து கொடுமைப்படுத்தினர் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு எஸ்.பி. ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications