லஞ்சம் கேட்டு போலீஸ் துன்புறுத்தல்-தீ குளிக்க முயற்சி
புதுக்கோட்டை:
லஞ்சம் கேட்டு போலீஸ் துன்புறுத்தியதால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் திருட்டு போய் உள்ளது. இது தொடர்பாக விசாரணை என்ற பெயரில் அந்தோணியை அழைத்து சென்ற போலீசார் வழக்கை விரைந்து முடிக்க அவரையே கைது செய்து விட்டனர்.
இதன் பின் அந்தோணி ஜாமீனில் வெளியே வந்தார். தவறே செய்யாத தன்னை வழக்கிலும் கைது செய்ததோடு, அதிலிருந்து விடுவிக்க லஞ்சமும் கேட்டு போலீசார் தொல்லை தந்ததால் வெறுத்துப் போனார் அந்தோணி.
இது குறித்து மாவட்ட எஸ்பி, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும் புகார் அனுப்பினார். இந்த விவரம் தெரியவரே போலீசார் மீண்டும் அந்தோணியை அடித்து, உதைத்தோடு பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனம் நொந்து போன அந்தோணி நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றார்.
ஓடிவந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அவரை காப்பாற்றினர். தகவல் அறிந்த போலீசார் மீண்டும் அந்தோணியை கைது செய்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications