தீவிர அரசியலுக்கு விரைவில் வருவேன் - முத்துலட்சுமி
கடலூர்:
மலைவாழ் மக்கள் இயக்கம் மூலமாக மலை வாழ் மக்களின் நலனுக்காக தீவிரமாக பாடுபடுவேன். படிப்படியாக தீவிர அரசியலில் நுழைவேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
கடலூர் மாட்டம் வடலூரில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துலட்சுமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழங்குடியினர் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். சத்யமங்கலம் வனப் பகுதியில் உள்ள பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். இதற்காகத்தான் மலைவாழ் மக்கள் இயக்கத்தை தொடங்கினேன்.
எனது கணவரைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படையினரால் இந்த மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். இன்னும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
3 ஆண்டுகள் நான் எனது கணவருடன் காட்டில் வாசம் புரிந்தேன். அப்போதுதான் பழங்குடியினரின் துயர நிலை எனக்குத் தெரிய வந்தது. மேலும், நான் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது.
தற்போது பழங்குடியினர் நலனுக்காக ஜனநாயக ரீதியில் பாடுபட்டு வருகிறேன். படிப்படியாக நான் தீவிர அரசியலுக்கு வருவேன். அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன் என்றார் முத்துலட்சுமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications