சஞ்சய் தத் மீண்டும் சிறையில் அடைப்பு
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று, இடைக்கால ஜாமீனில் வெளிவந்த இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு இன்று தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 வருடங்கள் கடுங்காவல் தண்டனையை மும்பை தடா நீதிமன்றம் விதித்தது. இதனையடுத்து இவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் தனக்கு தண்டனை குறித்த தீர்ப்பின் நகல் கிடைக்கும் வரை தன்னை ஜாமீனில் விடக்கோரி உச்சநீதிமன்றத்தை சஞ்சய் தத் அணுகினார். இதனையடுத்து உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கான தீர்ப்பின் நகல் தயாராகி விட்டது. சனிக்கிழமை சஞ்சய் தத் தவிர 13 குற்றவாளிகளுக்கு தீர்ப்பின் நகல் கொடுக்கப்பட்டது. இன்று காலை சஞ்சய் தத் மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு 4,340 பக்க தீர்ப்பின் நகல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சஞ்சய் தத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications