அரிசி கடத்தலை தடுக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 4 பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ரேசன் அரிசியை கடத்த முயன்றதைத் தடுக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி அன்றாடம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக கேரளாவுக்கும், பணகுடி வழியாக கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கும் ரேசன் அரிசி மூடைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கடத்தலை தடுக்க மாவட்ட எல்லைகளான செங்கோட்டையை அடுத்த புளியரையிலும், வள்ளியூரை அடுத்த பணகுடியிலும் போலீசார் செக்போஸ்ட் அமைத்து வாகனங்களை தணிக்கை செய்கின்றனர்.
இந்த செக்போஸ்ட் அமைக்கப்பட்டதில் இருந்து இந்த பகுதிகளில் அடிக்கடி ரேசன் அரிசி மூடைகள் லாரியுடன் பிடிபடுகின்றன. இதேபோல் சில இடங்களில் குடோன்களில் பதுக்கி வைத்தும் அரிசி கடத்தப்படுவதை போலீசார் கண்டிபிடித்து பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி நெல்லை அருகே சுத்தமல்லியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 17 தன் ரேசன் அரிசி மூடைகள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் ரமேஷ், கீளனர் முத்துலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பணகுடி பைபாஸ் ரோட்டில் பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்தனர். ஆனால் மினி லாரி நிற்காமல் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மீது மோதும் நோக்கத்தில் வேகமாக வந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மயிரிழையில் உயிர் தப்பினார்.
நிற்காமல் வேகமாக சென்ற லாரியை போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று பிடித்தனர். அதன் பின்னர் அந்த லாரியை சோதனையிட்டதில் அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 63 மூடைகள் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மினி லாரி டிரைவர் நாகர்கோவில், இருளப்பபுரத்தை சேர்ந்த விஷ்ணுகுமார், கிளீனர் மகேஷ், லாரியில் வந்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது ரேசன் அரிசி கடத்தல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை மினி லாரி ஏற்றி கொல்ல முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் 63 மூடை ரேசன் அரிசி மற்றும் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications