மர்ம மனிதன்: சசிகலா, இளவரசியிடம் போலீசார் விசாரணை
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் மர்ம மனிதன் நுழைந்தது குறித்து ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது அக்காள் மகள் இளவரசி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த வாரம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தண்டபாணி என்பவர் நுழைந்தார். அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா வீட்டு முதல் மாடி வரை சென்று இளவரசியின் அறையைத் திறக்க முயன்றபோது பிடிபட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வரான தனக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும், தன்னை கொல்ல சதி நடக்கிறது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந் நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த ஜெயலலிதாவின் இல்லத்திற்கு தேனாம்பேட்டை உதவி கமிஷ்னர் கண்ணபிரான் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் சென்றனர்.
வீட்டிற்கு வெளியே நின்ற காவலர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்ட அவர்கள் சசிகலா, இளவரசி, அவர்களின் உதவியாளர் கலி.பூங்குன்றன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும் வீட்டிற்குள் நுழைந்த தண்டபாணியின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், தாராபுரத்திலும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications