சேது திட்டத்துக்கும் பழைய வீராணம் கதி தான்-ஜெ
சென்னை:
பழைய வீராணம் திட்டம் என்ன கதியை அடைந்ததோ அதே நிலையை நோக்கிதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் சென்று கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழைய வீராணம் திட்டம் என்ன கதியை அடைந்ததோ, அதே நிலையை நோக்கிதான் சேது சமுத்திரக் கால்வாய் திட்டமும் சென்று கொண்டிருக்கிறது. வீராணம் திட்டம் அதோ கதியை சந்தித்தது. அதே வரலாறு மீண்டும் நிகழப் போகிறது.
இந்த திட்டம் குறித்து புதிதாக மீண்டும் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக்குழு வல்லுநர்களை கொண்ட குழு என்று மத்திய அரசு சாதிக்கிறது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள 3 நிபுணர்களால் ராமர் என்ற காவிய நாயகன் இருந்தாரா இல்லையா என்பதை மட்டுமே உறுதி செய்யமுடியும்.
இந்தக் குழுவில் கடலோர மக்களின், குறிப்பாக மீனவர்களின் பிரச்சனைகளை விவாதிக்க, சமூக அறிவியாலளர்கள் யாரும் இல்லை.
கடல் பயணங்கள் குறித்த பிரச்சனைகளை விவாதிக்க இந்தக் குழுவில் கடல் மற்றும் கப்பல் சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் யாரும் இல்லை. சேது சமுத்திரக் கால்வாய் சர்வதேச கடல் வழியாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசப் பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் எவரும் இல்லை.
சுனாமியால் ஏற்கனவே பாதிப்பு அடையக்கூடிய இந்தப் பகுதியில் கடலுக்கடியில் ஓடுகிற நீரோட்டம் அதன் விளைவுகள் குறித்து விவாதிக்க கடலியம் நிபுணர்கள் எவரும் இல்லை.
இந்த திட்டம் பொருளாதார ரீதியாக தமிழகத்தை உயர்த்தக் கூடிய திட்டம் என்று பிரசாரம் செய்யப்படும் தருணத்தில், பொருளாதார நிபுணர்கள் இந்த குழுவில் இடம்பெறவில்லை. இது போன்ற குறைகள் இந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்தும், இந்தக்குழு சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்தும் பெருத்த சந்தேகத்தை எழுப்புகின்றன.
எனவே, எந்த அடிப்படையில் மேற்காணும் குழுவை மத்திய அரசு நியமித்தது என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். மேற்காணும் குழுவை உடனடியாக கலைத்துவிட்டு மேலே குறிப்பிட்டுள்ள துறைகளை சார்ந்த வல்லுநர்கள் மட்டும் அல்லாமல் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்ட உண்மையான பாரபட்சமற்ற அதிகாரமுள்ள குழுவை மத்திய அரசு அமைக்கவேண்டும்.
இந்தக் குழு வெளிப்படையான முறையில் ஒரு பொது விவாதத்தை நடத்த, பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும். அவர்களுடைய கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications