7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
கேப் கேனவரல்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக டிஸ்கவரியை அனுப்ப நாசா தீர்மானித்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆய்வகங்களை அமைக்கவே இந்த புதிய பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக டிஸ்கவரியை நேற்று விண்ணுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால், திட்டமிட்டபடி டிஸ்கவரி செலுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும் திட்டமிட்டபடி டிஸ்கவரி செலுத்தப்படும் என நாசா அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு 21.08 மணிக்கு கேப் கேனவரல் விண்வெளி மையத்திலிருந்து டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 8.5 நிமிடங்களில் டிஸ்கவரி விண்வெளி சுற்றுப் பாதையை எட்டியது.
டிஸ்கவரியை எந்தப் பிரச்சினையும் இன்றி ஏவியதால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த விண்கலத்தில் முன்னாள் விமானப்படை கர்னர் பமீலா மெல்ராய் (வயது 46) தலைமையிலான 7 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. இவர்கள் 10 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அங்கு தங்கியிருப்பார்கள்.
இந்த விண் பயணத்தின்போது, ஐந்து முறை விண் நடை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை டிஸ்கவரி மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications