கூட்டணியில் ஜெ இருக்கிறாரா?-பதில் சொல்ல நாயுடு மறுப்பு!
வேலூர்: மூன்றாவது அணியில் அதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் மூன்றாவது அணியின் முக்கியத் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
காலை ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்த அவர், அங்குள்ள ஸ்ரீபுரம் தங்ககோவிலுக்கு சென்றார். ஹெலிகாப்டர் தளத்தில் நாயுடுவை தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணியின் முக்கிய பிரமுகரான நடிகை ரோஜா வரவேற்றார்.
பின்னர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் நாயுடு. தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய நாயுடுவிடம் நிருபர்கள் 3வது அணியில் அதிமுக இருக்கிறதா என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு இங்கு அரசியல் வேண்டாம். இது அரசியல் பேசும் இடம் அல்ல. வேலூர் நாராயணி சக்திபீடம் சிறந்த ஆன்மீக தலம் என்று தெரிந்து வைத்திருந்தேன். அதுபற்றி அதிகமாக எனக்கு தெரியாது. இங்கு வந்த பிறகுதான் உலகின் சிறந்த ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. என்பதை உணர்ந்து கொண்டேன்.
இங்கு வந்த பிறகுதான் எனக்கு அமைதியும் ஆனந்தமும் கிடைத்தது என்றார்.
மாலையில் வேலூர் வி.ஐ.டி. கல்லூரி-பல்கலைக்கழகம் மற்றும் சி.எம்.சி. மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாயுடு பங்கேற்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications