டோணிக்கு டொயோடோ கார் - ஜார்க்கண்ட் அரசு வழங்கியது
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசின் சார்பில் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு, டொயோடோ காரை அம்மாநில முதல்வர் மது கோடா பரிசளித்தார்.
20-20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பலரும் பரிசுகளை அறிவித்து இந்திய வீரர்களை பண மழையால் குளிப்பாட்டினர்.
கேப்டன் டோணி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அம்மாநில அரசு ஒரு ஆச்சரியமான பரிசைத் தரப் போவதாக அம்மாநில முதல்வர் மது கோடா தெரிவித்திருந்தார். அது என்ன பரிசு என்பது பரிசு வழங்கப்படும்போதுதான் தெரியும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் டோணிக்கு ஜார்க்கண்ட ரத்னா விருதும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஆனால் டோணிக்கு ஜார்க்கண்ட் ரத்னா விருது வழங்க மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த விருதை ஜார்க்கண்ட் விளையாட்டு ரத்னா விருது என்று மாற்றி விட்டனர்.
இந்த நிலையில், நேற்று தலைநகர் ராஞ்சியில் முதல்வர் மது கோடாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் டோணிக்குப் பாராட்டு விழா நடந்தது. அப்போது ஆச்சரியப் பரிசாக டொயோடோ கரோலா காரை மது கோடா வழங்கினார். மேலும் ரூ. 5 லட்சம் பரிசுக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
காரைப் பெற்றுக் கொண்ட டோணி, பரிசை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து விட்டார்.
பின்னர் கோடா பேசுகையில், நவம்பர் 15ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் உருவான 8வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஜார்க்கண்ட் விளையாட்டு ரத்னா விருது டோணிக்கு வழங்கப்படும்.
டோணி நமது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெருமைப்படுகிறோம். சர்வதேச வரைபடத்தில் ஜார்க்கண்ட் இடம் பெற டோணி முக்கிய காரணமாக அமைந்துள்ளார் என்றார் கோடா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications