குழந்தையின் இதயத்தில் சிக்கிய லாக்கெட்!
டெல்லி: டாக்டர்களின் கவனக்குறைவால், 9 மாதக் குழந்தைக்கு நுரையீரல் அறுவைச் சிகிச்சை செய்தபோது அந்தக் குழந்தையின் கழுத்தில் கிடந்த லாக்கெட் தவறுதலாக இதயத்திற்குள் சிக்கிக் கொண்டதாக டெல்லியில் சர்ச்சை எழுந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் சுரேந்தர் குமார் ஜா. இவருக்கு 9 வயதில் உதய் என்ற குழந்தை உள்ளது. இவனுக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த 19ம் தேதி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள் 22ம் தேதி அரசு லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனின் நுரையீரலில் நிறைய நீரும், சலமும் சேர்ந்துள்ளதாக கூறி அவற்றை நீக்க ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதையடுத்து டாக்டர்கள் அவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர்.
அப்போது சிறுவனின் இதயத்தில், அவன் அணிந்திருந்த கழுத்து லாக்கெட் சிக்கியிருப்பது தெரிய வந்தது. ஆனால் சிறுவனின் இதயத்தில் லாக்கெட் சிக்கவில்லை என்றும், எக்ஸ்ரே எடுத்தபோது வேறு ஏதோ ஒரு பொருள் லாக்கெட் போல பிரதிபலித்துள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் பி.ஆர்.சேத்தி கூறுகையில், எக்ஸ்ரேவை சிறுவனின் பெற்றோர் தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதயத்திற்குள் லாக்கெட் போன்ற பெரிய பொருட்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்பே இல்லை. எக்ஸ்ரே எடுத்தபோது, வேறு ஏதோ ஒரு பொருள் எக்ஸ்ரே பிலிமில் பிரதிபலித்துள்ளது. அதுதான் லாக்கெட் போல தெரிகிறது.
நுரையீரல் அறுவைச் சிகிச்சைக்காக கீ ஹோல் முறையைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எனவே அந்த சிறு துளை வழியாக சிறுவனின் இதயத்திற்குள் லாக்கெட் போய் சிக்கிக் கொண்டதாக கூறுவது சாத்தியமில்லாதது என்றார்.
இந்த சர்ச்சை டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க இந்திய மருத்துவ சங்கம், ஒரு குழுவை அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து டெல்லி மநில சுகாதாரத் துறை அமைச்சர் யோகானந்த் சாஸ்திரி கூறுகையில், டாக்டர்கள் மீது தவறு இருப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications