கோவை: கடைசி 5 பேருக்கு தண்டனை அறிவிப்பு
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் எஞ்சிய 5 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இத்துடன் கடந்த ஒன்றரை மாதங்களாக அறிவிக்கப்பட்டு வந்த தண்டனை விவரம் முடிவுக்கு வந்துள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 158 பேருக்கு பல கட்டங்களாக தண்டனை விவரத்தை தனிப்படை நீதிபதி உத்திராபதி அறிவித்து வந்தார்.
நேற்று வரை 153 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எஞ்சிய 5 பேருக்கு இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.
அதன்படி உஜிபுல் ரஹ்மான், முகம்மது அலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பக்ருதின் அலி அகமது, சாகுல் அமீது ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்படுவது முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு இந்த வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.
மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், மைத்துனர் சிக்கந்தர் ஆகியோர் தண்டனை பெற்ற மற்றவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய மைசூரைச் சேர்ந்த வெடிபொருள் வியாபாரி ரியாசுல் ரஹ்மான் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் மொத்தம் 88 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதானி உள்ளிட்ட 8 பேர் நிரபராதிகள் என அறிவிக்கப்படனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் தண்டனைக் காலத்தை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் விடுவிக்கப்பட்டவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications