குண்டுவெடிப்பில் 15 பாக். ராணுவ வீரர்கள் பலி
மின்கோரா (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற வாகன வரிசையில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதிகளை ஒடுக்க நேற்று முன்தினம்தான் 2000 ராணுவ வீரர்களை அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் நேற்று ஸ்வாட் மாவட்டத்தில் சாலையோரம் லாரியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் சிக்கி வாகனங்களில் சென்று கொண்டிருந்த 15 வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மறைந்திருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலுக்கு திருப்பித் தாக்கினர்.
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தலிபான் தீவிரவாதிகள், மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் அதிகளவில் நடமாடுகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வரும் தீவிரவாதிகளுக்கு இந்தப் பகுதிதான் அடைக்கலமாக உள்ளது. பின் லேடனே இங்குள்ள ஒரு மறைவிடத்தில்தான் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள தீவிரவாதிகளை விரட்டியடிக்க பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதலை மேலும் தீவிரமாக்கவே 2000 ராணுவ வீரர்கள் புதிதாக அனுப்பப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications