சிறைக்குள் 40 அடி நீள சுரங்கம்
மீரட்: உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள மத்திய சிறையில் 40 அடி நீளமுள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் உள்ள மத்திய சிறைக்குள் 40 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறையின் 17 மற்றும் 18வது சிறை அறைப் பகுதியில் இந்த சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது.
சிறைக் கண்காணிப்பாளர் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறையிலிருந்து தப்புவதற்காக சிறைக் கைதிகள் இந்த சுரங்கத்தைத் தோண்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து சிறைக் கைதிகளிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைக்குச் சென்று அந்த சுரங்கத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மீரட் சிறையில் பெரிய அளவில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
